தமிழ்நாடு மின்வாரிய தொழிற்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறு ஆலோசனை கோரி திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.