திருச்சி இனாம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன், 15 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினியை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மகன் தாயுடன் சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளான மனோகரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இனாம் குளத்தூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.