திருச்சி: டி. என். பி. எஸ். சி. தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி

54பார்த்தது
திருச்சி: டி. என். பி. எஸ். சி. தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஆண்டுத் திட்டநிரலின்படி, துணை கலெக்டர், போலீஸ் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பாணை 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்தத் தேர்வினை போட்டித்தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்புக் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

  இந்தப் பயிற்சி வகுப்பில் சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு இலவசமாகப் பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். எனவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் போட்டித் தேர்வர்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0431-2413510 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கலெக் டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி