திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில், அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்தவர்களுக்கு மதிய உணவு மண்டப நுழைவு வாயிலை மறைத்தவாறு மினி வேன் மூலம் விநியோகிக்கப்பட்டது. உணவுப் பொட்டலங்களைப் பெற ஆண்கள், பெண்கள் என அனைவரும் முண்டியடித்துச் சென்றனர். போதிய போலீஸ் பாதுகாப்பு இருந்தும் யாரும் கண்டுகொள்ளாததால், பெண்கள் "இந்த சாப்பாட்டை கஷ்டப்பட்டு வாங்கினால் உடம்பில் ஒட்டுமா" என ஆதங்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.