தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்குகிறது.
அதன் அடிப்படையில் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதல், மின்னணு வடிவமைப்பு, உற்பத்தித் துறை, தானியங்கி தொழில்துறை, இயந்திரவியல், சோர்க்கை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து வழங்கப்படும். இப்பயிற்சியை கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர், மற்றும் சீர்பெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், மின்னணு உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்தபட்சமாக ரூ. 20,000 ஊதியம் பெறலாம். பயிற்சிக் கட்டணத்தை தாட்கோ ஏற்கும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை, திருச்சி-620001 என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்தார்.