மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தினமும் இயக்கப்படும் ஏர் ஏசியா விமான சேவையில், நிர்வாக காரணங்களுக்காக ஒரு விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 1-ந் தேதி முதல் தினசரி ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகளால் ஏற்படும் விமான தட்டுப்பாட்டை சமாளிக்க, இந்த மாதம் முழுவதும் தேவைக்கேற்ப தினசரி ஒரு விமான சேவை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வர வேண்டிய மற்றும் திருச்சிக்கு வந்து செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.