திருச்சி: மோடி பங்கேற்க உள்ள இடங்களில் நயினார் ஆய்வு

2பார்த்தது
பாரத பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திருச்சி பஞ்சப்பூர், மாத்தூர், பொன்மலை ஜி கார்னர் ஆகிய பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று பொன்மலை ஜி கார்னர் ரெயில்வே மைதானத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி