திருச்சி: மோடி பங்கேற்கும் கூட்ட இடம் ஆய்வு செய்த நயினார்

3பார்த்தது
திருச்சி: மோடி பங்கேற்கும் கூட்ட இடம் ஆய்வு செய்த நயினார்
திருச்சியில் வரும் 11ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தேர்வு செய்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பஞ்சப்பூர் மற்றும் பொன்மலை ஜி ஜி கார்னர் ரயில்வே மைதானம் ஆகிய இடங்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, அதிமுக மாவட்ட செயலாளர்கள் பரஞ்சோதி, சீனிவாசன் மற்றும் பாஜக‌ பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி