நீதி கட்சியின் தலைவர் சர். ஏ. டி. பன்னீர்செல்வம் அவர்களின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீமாரோஸ், பழ கருப்பையா தேவையில்லாமல் பேசுகிறார் என்றும், இந்திய பொருளாதாரத்திற்காக அவர் என்ன செய்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பினார். இறைவன் வாயைப் படைத்தான் என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.