திருச்சி சூப்பர் பஜார் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உள்ள தேநீர்க் கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிங்கரத்தோப்பைச் சேர்ந்த சையதுஅலி (42) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றுவந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சனிக்கிழமை அவரைக் கைது செய்து புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.