திருச்சி: ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

68பார்த்தது
திருச்சி: ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகம், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம், 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 404 ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். உதவி இயக்குநர், ஊரதி ஓட்டுநர்கள், பொறியாளர் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே பெரும்பாலும் பணிக்கு வந்திருந்தனர். 

இதன்காரணமாக, மாவட்டத்தில் உள்ள வளர்ச்சித் துறையின் பெரும்பாலான அலுவலகங்கள் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறையில் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கணினி இயக்குநர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி பணிவரன்முறைப்படுத்த வேண்டும். ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். 

விடுபட்ட சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி