திருச்சி: சபரிமலை சீசன் - கொல்லத்துக்கு சிறப்பு ரயில்

0பார்த்தது
திருச்சி: சபரிமலை சீசன் - கொல்லத்துக்கு சிறப்பு ரயில்
திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம், சபரிமலை யாத்திரை சீசனையொட்டி கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ஹாசுா் சகிப் நந்தட் - கொல்லம் இடையே இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஹாசுா் சகிப் நந்தட் - கொல்லம் சிறப்பு ரயில் (07111) நவம்பர் 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8, 15 ஆகிய வியாழக்கிழமைகளிலும், கொல்லம் - ஹாசுா் சகிப் நந்தட் சிறப்பு ரயில் (07112) நவம்பர் 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27, ஜனவரி 3, 10, 17 ஆகிய சனிக்கிழமைகளிலும் இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி