திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் புதுக்கோட்டையை சேர்ந்த பயிற்சி செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எழுந்த புகாரைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செவிலியர் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவியின் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் மாணவிகளிடம் உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.