திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 22 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் வேலைப்பளு திணிப்பைக் கைவிட வேண்டும், இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.