நடிகர் விஜய் பங்கேற்கும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று (புதன்கிழமை) தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் நடைபெறுகிறது. இதில் 4,900 நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். கூட்டத்தில் பங்கேற்க விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்துள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்.