திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த சாலைப் பாலம் சீரமைக்கும் பணி 4 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் 2 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. வியாழக்கிழமை, பாலம் சீரமைப்புப் பணியின்போது கழிவுநீர் குழாய் உடைந்து குடிநீரில் கலந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.