திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கிஷோர் குமார். காட்டூர் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதில் பல லட்சம் பணத்தை அவர் இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய மனைவி அளித்த தகவலின் பேரில் திருவாரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.