திருச்சி கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இ. பி ரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே போதை மாத்திரை விற்ற லால்குடி பெருவளநல்லூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (22) மற்றும் பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்த மகேந்திரன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.