சமயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் முதியவர் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சமயபுரம் போலீசார் முதியவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்ட போது அவர் சேலம் மாவட்டம் பெருமாகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாதவராஜ் வயது 75 என தெரியவந்தது. இதை அடுத்து அவருடைய மகன் விஜயகுமாருக்கு தகவல் அளித்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.