திருச்சி ஆட்சியரகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

62பார்த்தது
திருச்சி ஆட்சியரகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியரகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அந்தந்த வாக்குச்சாவடி வாரியாக வைக்கப்பட்டு சீல் வைத்து 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, அவ்வப்போது இந்த பாதுகாப்பு அறை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு இயந்திரங்கள் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும்.இதன்படி, வியாழக்கிழமை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு வைக்கப்பட்டிருந்த சீல் விலக்கப்பட்டு, அறையை திறந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:பாதுகாப்பு அறையில் 8637 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3449 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3990 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 16076 இயந்திரங்கள் உள்ளன. தேர்தல் முடிந்த பிறகு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு எப்படி கொண்டு வரப்பட்டதோ அதே நிலையில் சீல் வைக்கப்பட்டிருப்பதை அரசியல் கட்சியினர் முன்னிலையில் உறுதி செய்யப்பட்டது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார் ஆட்சியர்.

தொடர்புடைய செய்தி