SIR-ஆல் முதல்வருக்கு என்ன வருத்தம்? நயினார் நாகேந்திரன்

6பார்த்தது
திருச்சியில் இன்று நடைபெற்ற SIR சிறப்பு திருத்தம் குறித்த விளக்கக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் எதிர்ப்பதற்க்கு தான் திமுக அரசு இருக்கிறது. நாலே முக்கால் வருஷத்தை திமுக அரசு வீணடித்துள்ளது. உதயநிதியை முதல்வர் ஆக்குவது மட்டும் செய்து வருகிறார். எஸ் ஐ ஆர் விவகாரத்தில் முதலமைச்சருக்கு என்ன வருத்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. எங்களிடம் அவ்வளவு கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் தமிழக முதல்வரை பார்த்து எந்த கேள்வியும் எஸ் ஐ ஆர் பற்றி கேட்பதில்லை" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி