திருச்சி மாவட்டம் கல்லக்குடி சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்த சுமதி, கடந்த டிசம்பர் மாதம் கணவர் உயிரிழந்ததில் இருந்து விரக்தியில் காணப்பட்டார். நேற்று, அவர் தனது மகள் அனுசியாவுடன் சேர்ந்து உணவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குடி போலீசார், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.