திருச்சி ஜி ஹெச் இல் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு பெண் கைது

0பார்த்தது
துறையூர் அருகே வீரமச்சான்பட்டியைச் சேர்ந்த சுகன்யாவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இன்று காலை செவிலியர் உடை அணிந்த பெண் ஒருவர் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த தூக்கிச் சென்றார். நீண்ட நேரமாகியும் குழந்தை திரும்ப வராததால், சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டபோது, குழந்தையை தூக்கிக்கொண்டு அந்தப் பெண் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை துறையூர் அருகே கைது செய்து குழந்தையை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி