ஆசிரியர் தனலட்சுமிக்கு உலக சாதனை அங்கீகாரம்

570பார்த்தது
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பேட்டையில் பணியாற்றி வரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி, சரஸ்வதி தேவியின் ஓவியத்தில் சுமார் 2 மணி நேரத்தில் பல்வேறு பாடல்களை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். பெங்களூரு ஷியாம்ஸ் ஆர்ட் மற்றும் கிராஃப்ட் அகாடமி யூனிட்டி யூனிவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட் நிறுவனம் நடத்திய இணையவழி காணொளி மூலம் இந்த சாதனை நிகழ்வு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் ஆசிரியரின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது.

தொடர்புடைய செய்தி