திருச்சி ராம்ஜிநகர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்ற தாமரைச்செல்வன் என்பவரை விசாரித்தபோது, விற்பனை நோக்கத்திற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.