திருவரம்பூர் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது

81பார்த்தது
திருவரம்பூர் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது
திருவெறும்பூர் அருகே மூதாட்டியிடம் விலாசம் கேட்பது போல் வந்து 4 பவுன் செயினை பறித்து சென்றவனை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். 

திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி திருநகர் நான்காவது தெரு குழந்தை இயேசு தெருவைச் சேர்ந்தவர் அடைக்கலப் பிளம்மிங் ராஜ் இவரது மனைவி புளோரம்மா (70). இவர் கடந்த 17ம் தேதி மாலை அந்தப் பகுதியில் நடந்து வந்த பொழுது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் புளோரம்மாவிடம் விலாசம் கேட்பது போல் பக்கத்தில் வந்து பேச்சுக் கொடுத்தவர் புளோரம்மா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டான். 

இச்சம்பவம் குறித்து புளோரம்மா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபரைத் தேடி வந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அமல்ராஜ் (33) என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் அமல்ராஜைக் கைது செய்ததோடு அவரிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர். 

பின்னர் அமல்ராஜை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி அமல்ராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி