துறையூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் வயது 24. சம்பவம் நடந்த நேற்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அறிவித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.