திருச்சி ஜீயபுரம் காவல் நிலையா எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் சம்பவம் நடந்த மூன்றாம் தேதி அன்று வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.