
துவரங்குறிச்சி அருகே கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு மீட்பு
துவரங்குறிச்சி அடுத்த கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவருக்குச் சொந்தமான பசுமாடு, அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதைக் கண்ட மாட்டின் உரிமையாளர் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட பசுமாடு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.





























