
தீபாவளியை கொண்டாட 143 கைதிகளுக்கு 15 நாள் பரோல்
தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், 143 கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 60 வயதைக் கடந்த 103 முதியவர்கள் மற்றும் 40 பெண் கைதிகள் அடங்குவர். மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்தப் பரோல் வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அரசின் இந்த அறிவிப்பால் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாட உள்ள கைதிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





























