
ஆண் நண்பரை தாக்கி பெட்ரோல் ஊற்றி கொலை செய்த பெண்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், சின்னப்பராஜ் என்பவர் மீது பூமணி என்பவர் செல்போன் பவர் பேங்கால் தாக்கி, பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்துள்ளார். நேற்று இரவு இருவரும் மது அருந்தும்போது வாக்குவாதம் முற்றியதில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பூமணி இன்று காலை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். போலீசார் சின்னப்பராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


































