ஊதியூர் அருகே வெறி நாய்கள் கடித்து 16 ஆடுகள் பலி

192பார்த்தது
காங்கேயம் ஊதியூர் அருகே வட்டமலைபாளையம் திருமாயி தோட்டத்தில் விவசாயம் செய்து வரும் சிவசுப்பிரமணியம் (45) என்பவருக்குச் சொந்தமான 90 ஆடுகளில், நேற்று இரவு வெறி நாய்கள் தாக்கி 16 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 8 ஆடுகள் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. சுமார் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் திரியும் வெறி நாய்களை மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாகப் பிடித்து அப்புறப்படுத்தாவிட்டால், விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர். சம்பவ இடத்தில் ஊதியூர் காவல்துறையினர், வருவாய்த் துறையினர், கால்நடை மருத்துவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி