குன்னத்தூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

66பார்த்தது
குன்னத்தூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது
குன்னத்தூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது குன்னத்தூர் ஆதியூர் ராசாகோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது ஒரு ஆட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது 2 பேர் ஆடு திருடிச் சென்றது தெரியவந்தது. 

இந்நிலையில் நேற்று குன்னத்தூர் தொரவலூர் ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரைப் பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் அவினாசி காசிலிங்கம் பாளையம் சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 24), ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (26) இருவரும் ஆட்டைத் திருடி விற்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி