அவினாசி தாலுகா நடுவச்சேரி கிராமத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பயிர்க்க டன் தள்ளுபடி கிடைக்காததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தின் அலட்சிய போக்கினால் தமிழ்நாடு அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் 127 விவசாயிகளுக்கு கிடைக் காமல் போனதாக குற்றம் சாட்டினர்.