நாளை குரூப்-2 தேர்வு 361 பேர் எழுதுகிறார்கள்

1529பார்த்தது
நாளை குரூப்-2 தேர்வு 361 பேர் எழுதுகிறார்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-2 (குரூப்-2) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இத்தேர்வினை திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 361 பேர் எழுதுகின்றனர். திருப்பூர் வடக்கு வட்டத்தில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9:30 முதல் 12:30 வரையிலும், பிற்பகல் 2:30 முதல் 5:30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி