திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் சட்டவிரோதமாக தங்குவதாகக் கிடைத்த தகவலின் பேரில், அவினாசி அடுத்த கணேசபுரம் வைஷ்ணவி கார்டன் பகுதியில் நைஜீரியாவைச் சேர்ந்த 4 பேர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியாகியிருந்த நிலையில், ஐகென்னா மேக்னஸ் (50), ரீட்டா அவியான்போ (43), பிடிலிஸ் ஓனெரெக்லோ (46), இசுசுக்குவு ஜான் (40) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அவினாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.