ஊத்துக்குளி: குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு

69பார்த்தது
ஊத்துக்குளி: குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு
ஊத்துக்குளி அருகே உள்ள எஸ். பெரியபாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 30). இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தினேஷ்குமார் கூலிபாளையம் நால்வர் ரோடு பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் தினேஷ் குமார் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டுவாடகை கொடுக்காமலும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது மனைவி தங்கமணி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டதாக தெரியவருகிறது. இதனால் மனம் உடைந்த தினேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி