அவிநாசி அருகே புது ஊஞ்சப்பாளையம் பகுதியில் ராணி (55) மற்றும் அவரது மகன் பிரேமானந்த் (25) ஆகியோர் வசித்து வருகின்றனர். புதன்கிழமை அன்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.