திருப்பூர் வடக்கு பெருமாநல்லூர் தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கிளை தலைவர் பழக்கடை குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கண்ணப்பன் கலந்துகொண்டார். கூட்டத்தில் மே மாதம் 5-ந் தேதி தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை யின் மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கூட்டத்தில் வணிகர் சங்க மாநாட்டில் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள் வது, மாநாட்டிற்கு விளம்பர பலகைகள், துண்டு பிரசுரங் களை மக்களிடம் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றபட் டது. கூட்டத்தில் புதிதாக திருப்பூர் வடக்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளராக ஆடல் அரசு தேர்வு செய்யப்பட்டார். இதில் மாவட்ட செயலாளர் பாஸ்கர், இளைஞர் அணி தலைவர் வி. ஆர். ரமேஷ், மாவட்ட துணை தலைவர் ஜோதீஸ்வரன் மற்றும் மகளிர் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.