அவினாசி: கஞ்சா விற்றவர் கைது

66பார்த்தது
அவினாசி: கஞ்சா விற்றவர் கைது
அவினாசி அருகே தெக்கலூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவினாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கைப்பையுடன் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில் பெருமாநல்லூர் எஸ்.எஸ். நகரில் வசித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த ராஜா புட்டேல் (வயது 20) பனியன் தொழிலாளி என்பதும், அவர் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா புட்டேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.