திருப்பூர், பாண்டியன் நகரைச் சோ்ந்த செல்வராஜ் (56) தனது மனைவி, மகன், தாயாருடன் கணியூர் சென்றுவிட்டு திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தபோது, தாராபுரம்-திருப்பூர் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் செல்வராஜ் பலத்த காயமடைந்தார். மற்ற மூவர் காயமின்றி தப்பினர். ஊதியூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.