குன்னத்தூரில் மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தில் நடைபெற்ற தென்னங்கருப்பட்டி ஏலத்தில், விவசாயிகள் கொண்டு வந்த 1,500 கிலோ கருப்பட்டி கிலோ ரூ. 135 வீதம் விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ. 2 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. இந்த தகவலை கூட்டுறவு விற்பனை சம்மேளன செயல் தலைவர் சந்திரசேகரன் மற்றும் மேலாளர் கோமதி ஆகியோர் தெரிவித்தனர்.