அவினாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமைதோறும் நடைபெறும் பருத்தி ஏலத்தில், நேற்று 48 குவிண்டால் எடையுள்ள 173 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஆர்.சி.எச்.பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 7,079 முதல் ரூ. 8,599 வரையிலும், கொட்டுரக பருத்தி ரூ. 3,299 முதல் ரூ. 6,799 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 72 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. கோவை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இதில் பங்கேற்றனர்.