ரூ. 5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

395பார்த்தது
ரூ. 5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 7,052 கிலோ பருத்தியை கொண்டு வந்திருந்தனர். இதில், ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6,000 முதல் அதிகபட்சம் ரூ.7,899 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.3,000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 2 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானதாக கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் காவியா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி