அவினாசி கூட்டுறவு விற்பனை கூடத்தில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 83 விவசாயிகள் 125 குவிண்டால் எடையுள்ள 467 மூட்டைகளை கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்.பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரத்து 119 வரையிலும், கொட்டுரக பருத்தி ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரத்து 500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 10 லட்சத்து 65 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது.