திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பெருமாநல்லூர் நால்வழி அருகில் கிளைக்கழக அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் கலந்துகொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கட்சிக் கொடி ஏற்றினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பெருமாநல்லூர் நால்வழி பகுதியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வைப்பதற்காக வாட்டர் கேன் கூண்டையும் திறந்து வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் காளிபாளையம் விஸ்வநாதன், மாநில மகளிர் பிரசார அணி செயலாளர் உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தாமணி, மாவட்ட பிரதிநிதி சி.டி.சி. வேலுச்சாமி, இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.