அவினாசி அருகே டிரைவர் கொலை: 2 பேர் கைது

0பார்த்தது
அவினாசி அருகே டிரைவர் கொலை: 2 பேர் கைது
அவினாசி அருகே சின்னேரிபாளையம் பகுதியில் டிரைவர் டோமிக் சகாயராஜ் (51) கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். விபத்து போல சித்தரிக்க மோட்டார் சைக்கிள் அவர் உடல் மீது போடப்பட்டது. மதுபானம் அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கணேஷ் ஆனந்த் (26) மற்றும் சரவணன் (35) ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி