மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு

57பார்த்தது
மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
ஊத்துக்குளி அருகே உள்ள அணைப்பாளையம் ஊராட்சி சரவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மனைவி ஆட்சியம்மாள் (வயது 59). சம்பவத்தன்று இவரது வீட்டில் மின்தடை ஏற்பட்டிருந்தது. 

இதையடுத்து தோட்டத்துக் கிணற்றுக்குச் செல்லும் மோட்டார் அறையிலிருந்து வீட்டிற்கு வயர் மூலம் இணைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்சியம்மாள் பியூஸ் கேரியரில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வயரைப் பிடித்து இழுத்தபோது அவரது கையில் மின்சாரம் பாய்ந்தது. அதில் தூக்கி வீசப்பட்ட ஆட்சியம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஆட்சியம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி