ஈரோடு மாவட்டம் பொன்முடியைச் சேர்ந்த 64 வயது விவசாயி முருகசாமி, சொந்த
வேலை காரணமாக நேற்று முன்தினம் இரவு விஜயமங்கலம்-ஈங்கூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.