கஞ்சா புகையிலை விற்றாஐந்து பேர் கைது

0பார்த்தது
கஞ்சா புகையிலை விற்றாஐந்து பேர் கைது
திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஆட்டையாம்பாளையம் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோயல் மாலிக் மற்றும் பிள்ளையான் நிமா என்பதும், அவர்களிடம் விற்பனைக்காக 5 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. மேலும், இந்த கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து அவினாசி பகுதியில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதேபோல், திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.